இந்திய அணி பந்துவீச்சில் சுருண்டது தென்னாப்பிரிக்கா அணி

1071பார்த்தது
இந்திய அணி பந்துவீச்சில் சுருண்டது தென்னாப்பிரிக்கா அணி
இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 55 ரன்னில் சுருண்டது தென் ஆப்பிரிக்கா அணி. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி வீரர்களின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல், தென் ஆப்பிரிக்கா அணி 55 ரன்களில் சுருண்டது. இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 15 ரன்களை விட்டுக்கொடுத்து 6 விக்கெட்களை வீழ்த்தி அசத்தினார். இந்திய அணி வீரர்கள் முகேஷ் குமார், பும்ரா தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.