மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த கணவன்!

23528பார்த்தது
மனைவியை நண்பர்களுடன் சேர்ந்து சீரழித்த கணவன்!
செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் காவல் நிலையத்தில் பெண் ஒருவர் தனது கணவர் உட்பட நான்கு பேர் மீது புகார் அளித்துள்ளார். அதில், அந்த பெண்ணின் கணவர் மற்றும் அவரது நண்பர்கள் 4 பேர் இணைந்து அவரை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறியுள்ளார். கடந்த 2021ல் இருவருக்கும் திருமணம் நடந்துள்ளது. பின்னர் கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 மாதங்களாக பிரிந்து வாழ்ந்துவந்த நிலையில் கடந்த 18ஆம் தேதி அவரது நண்பர்களுடன் வந்து தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்ததாக புகார் அளித்துள்ளார். இதனையடுத்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி