இளையராஜா இசைக் கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் - சீமான் வாழ்த்து

53பார்த்தது
இளையராஜா இசைக் கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் - சீமான் வாழ்த்து
சென்னையிலுள்ள இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் (IITM) இசைஞானி இளையராஜா அவர்களின் பெயரில் இசை கற்றல் மற்றும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட்டுள்ளது மிகுந்த மனமகிழ்வினை அளிக்கிறது என‌ நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள அவர், இசையின் ராஜா எங்கள் ஐயா இளையராஜா அவர்களின் பல்லாயிரக்கணக்கான பாடல்களில் கொட்டிக் கிடக்கும் இசை நுணுக்கங்களை ஆய்ந்தறிந்து அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் அறிவுக்கருவூலமாக இளையராஜா இசை ஆராய்ச்சி மையம் இயங்கும் என்பது திண்ணம் என குறிப்பிட்டுள்ளார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி