அமைச்சர் செல்லூர் ராஜூக்கு மாணிக்கம் தாகூர் நன்றி

57பார்த்தது
அமைச்சர் செல்லூர் ராஜூக்கு மாணிக்கம் தாகூர் நன்றி
ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்ட அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுக்கு காங்கிரஸ் மக்களவை உறுப்பினர் மாணிக்கம் தாகூர் நன்றி தெரிவித்துள்ளார். நான் பார்த்து நெகிழ்ந்து ரசித்த இளம் தலைவர் ராகுல் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிவிட்டு இருந்தார். இந்நிலையில், செல்லூர் ராஜுவின் பதிவை மேற்கோள்காட்டி 'அண்ணனுக்கு நன்றி" என மாணிக்கம் தாகூர் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ராகுல் காந்தியை புகழ்ந்து பதிவிட்டது குறித்து அமைச்சர் செல்லூர் ராஜு, "எளிமையாக அனைத்து மக்களுடன் அமர்ந்து சாப்பிடுவதை ரசித்து பகிர்ந்தேன்'' என விளக்கம் அளித்திருந்தார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி