ஆஸ்திரேலியா - இந்தியா இடையே அண்மையில் நடந்த சிட்னி டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் பும்ரா பந்து வீச்சை எதிர்கொள்ள கவாஜாவும், சாம் கான்ஸ்டாஸும் தடுமாறினர். நான்-ஸ்ட்ரைக்கர் எண்டில் இருந்த கான்ஸ்டாஸ் பும்ராவிடம் வம்பிழுத்தார். இது குறித்து தற்போது பேசிய கான்ஸ்டாஸ், "தவறு என்னுடையது தான். பும்ராவை நான் சீண்டினேன், அவர் விக்கெட் கைப்பற்றி அசத்தினார். ஒட்டுமொத்தமாக பார்த்தால் இதுதான் கிரிக்கெட்" என்றார்.