திண்டுக்கல் ஒட்டன்சத்திரம் கொங்கபட்டியைச் சேர்ந்தவர் விவசாயி சண்முகசுந்தரம் (40). இவர் ரூ.2 லட்சம் மதிப்பிலான பட்டணா இனத்தைச் சேர்ந்த 25 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று (ஜன.7) வழக்கம்போல் ஆடுகளை மேய்த்து விட்டு கூடாரத்தில் அடைத்து விட்டுச் சென்றுள்ளார். கூடாரத்திற்குள் புகுந்த வெறிநாய்கள் 25 ஆடுகளையும் கடித்து குதறின. சத்தம் கேட்டு தோட்டத்தில் இருந்தவர் நாய்களை விரட்டியுள்ளார். இருப்பினும் நாய்கள் கடித்ததால் அனைத்து ஆடுகளும் பரிதாபமாக இறந்தன.