இரவு தூங்கச் செல்வதற்கு முன் ஒரு டம்ளர் நீரில் வெண்டைக்காயைச் சிறு துண்டுகளாக நறுக்கிப் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து காலை எழுந்ததும் அந்த நீரைப் பருகினால் ரத்த சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். எலும்புகளின் அடர்த்தியை அதிகரிக்க தினமும் இதை அருந்தலாம். சுவாசம் தொடர்பான பிரச்னை உள்ளவர்கள் வெண்டைக்காய் ஊறிய நீர் அருந்துவது நல்லது, ஆஸ்துமா கோளாறு சரியாகும் என்கின்றனர் மருத்துவர்கள்.