சத்தீஸ்கர் மாநிலம், பல்ராம்பூரில் தீவிர பாஜக ஆதரவாளரான துர்கேஷ் பாண்டே (30) கடந்த ஜூன் 4ஆம் தேதி மக்களவை தேர்தலில் முதல் சுற்றி காங்கிரஸ் முன்னிலையில் இருந்ததை பார்த்து காளி தேவி கோவிலுக்கு சென்று பிராத்தனை செய்துள்ளார். பின்னர் மாலையில் பாஜக கூட்டணி அதிக இடங்களை கைப்பற்று வெற்றி பெற்றது. இதனையடுத்து தான் வேண்டியபடியே தனது இடது கைவிரலை வெட்டி காளி தேவி கோவிலில் காணிக்கையாக வழங்கியுள்ளார். அப்போது அவரது கையில் வந்த ரத்தத்தை நிறுத்த துணியை சுற்றியுள்ளார். அது பலனளிக்காததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.