தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் தகவல் அளித்துள்ளது. தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவி வருவதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் அடுத்த 7 நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. குறிப்பாக, இன்றைய தினம் கோவை, நீலகிரி, கிருஷ்ணகிரி மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.