செந்தில்பாலாஜி விடுதலை பெற வேண்டி அங்கப்பிரதட்சணம்... வீடியோ...

75பார்த்தது
முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலைப் பெற்று நலமுடன் வாழ வேண்டி அறம் மக்கள் கட்சியினர் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்துள்ளனர். கடந்த வருடம் சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்ட வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்ட செந்தில் பாலாஜி புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவர் விடுதலை பெற வேண்டி அறம் மக்கள் கட்சியின் தொண்டர்களும், நிர்வாகிகளும் கரூர் மாரியம்மன் கோவிலில் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபாடு செய்தனர். மேலும், கரூர், திருச்சி, சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள கோவில்களில் அறம் மக்கள் கட்சியை சேர்ந்த 100-க்கும் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் சிறப்பு வழிபாடு நடத்த உள்ளனர்.

நன்றி: பாலிமர் நியூஸ்.
Job Suitcase

Jobs near you