உ.பி: சந்தோலி மாவட்டம் ஹமீத்பூர் கிராமத்தில் சப்பாத்தி தர தாமதமானதால் மணமகன் திருமணத்தை நிறுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. திருமண நிகழ்ச்சியில், சப்பாத்தி சுட்டு வழங்க தாமதமானதாக கூறி மணமகன் மெஹ்தாப் மற்றும் அவரது உறவினர்கள் திருமணத்தையே நிறுத்திவிட்டு வெளியேறியுள்ளனர். அதன்பின் மெஹ்தாப் தனது உறவினரின் பெண்ணை திருமணம் செய்துகொண்டுள்ளார். இதனை அறிந்த மணமகளின் குடும்பத்தினர் திருமணத்திற்கு செலவிட்ட ரூ.7 லட்சம் மற்றும் வரதட்சணைத் தொகை ரூ.1.5 லட்சத்தை திரும்பத்தர கோரி போலீசில் புகாரளித்துள்ளனர்.