தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில இடங்களில், இன்று (மார்ச். 13) முதல் 4 நாட்களுக்கு, இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் தெரிவித்தார். "குமரிக்கடல் பகுதிகளின் மேல், ஒரு வளி மண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுவதால் தமிழகத்தில் ஒரு சில இடங்கள், புதுச்சேரி, காரைக்காலில் மிதமான மழை பெய்யவும் வாய்ப்புள்ளது" என கூறினார்.