எம்பி மீது பணமோசடி வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை

54பார்த்தது
எம்பி மீது பணமோசடி வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை
திரிணாமூல் காங்கிரஸ் எம்பி மஹூவா மொய்த்ரா மீது பண மோசடி வழக்கு பதிவு செய்து அமலாக்கத்துறை அதிரடி காட்டியுள்ளது. மேற்கு வங்கத்தின் கிருஷ்ணா நகர் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் மஹூவா. இவர் நாடாளுமன்றத்தில் பாஜகவை தொடர்ந்து எதிர்த்து வந்தார். இந்த நிலையில் மீண்டும் கிருஷ்ணா நகர் தொகுதியின் திரிணாமூல் காங்கிரஸ் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ள, மஹூவாவிற்கு எதிராக அமலாக்கத்துறை பண மோசடி வழக்கு பதிவு செய்திருப்பது, அரசியல் களத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்புடைய செய்தி