அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை

62பார்த்தது
அடுத்த 3 மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மழை
தென் தமிழகம் மற்றும் மேற்குத் தொடர்ச்சி மலை உள்ள மாவட்டங்களின் ஓரிரு இடங்களில், வளிமண்டல கீழடுக்கு மற்றும் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இன்று (ஏப்ரல் 2) மற்றும் நாளை (ஏப்ரல் 3) இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும், அடுத்த 3 மணி நேரத்தில் கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, திருப்பத்தூர், சிவகங்கை, திண்டுக்கல், தேனி ஆகிய 7 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி