பணத்தை பங்கு பிரிப்பதில் பாஜக - ஐஜேகே இடையே மோதல்

55679பார்த்தது
நாடாளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்துக் கட்சி தலைவர்களும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், அனைத்து தொகுதிகளிலும் தங்களது செல்வாக்கை காட்டுவதற்காக மக்களை பணம் கொடுத்து கூட்டி வருவதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது. அது உண்மையாக்கும் வகையில் தற்போது புதுச்சேரி மாநிலத்திலுள்ள பாஜக அலுவலக வாசலில் பாஜக - ஐஜேகே கட்சிகளுக்கு இடையே பணப்பட்டுவாடா செய்யும் பணத்தை பங்கு பிரிப்பதில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரை ஒருவர் தாக்கிக்கொள்ளும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

நன்றி: Spark Media