பிராமணர்கள் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கேட்ட வேட்பாளர்

60பார்த்தது
பிராமணர்கள் குறித்து அவதூறு பேச்சு: மன்னிப்பு கேட்ட வேட்பாளர்
பிராமணர்கள் குறித்த தனது பேச்சுக்கு பகிரங்கமாக மன்னிப்பு கோரினார் ஹரியானா ஹிசார் தொகுதி பாஜக வேட்பாளர் ரஞ்சித் சிங் சவுதாலா. சில நாட்களுக்கு முன்பு கூட்டம் ஒன்றில் பேசிய அவர், “நாட்டில் நடக்கும் சாதிய வன்முறைகளுக்கு பிராமணர்கள் தான் காரணம்” என கூறியிருந்தார். அவரின் காணொளிகள் வைரலான நிலையில், தற்போது தன்னுடைய பேச்சிற்கு மன்னிப்பு கோரியுள்ளார். “பிராமணர்கள் மதிப்புமிக்கவர்கள். எந்த வேலையையும் அவர்களின் அனுமதியுடன் தான் தொடங்குகிறோம்” என்று சொல்லி பல்டி அடித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி