ஆட்டோ முன் பாய்ந்த நாய்.. விபத்து வீடியோ வைரல்

50பார்த்தது
வேலூர் மாவட்டம் குடியாத்தம் சாந்தபஜார் பகுதியில் நேற்று (மே 28) ஆட்டோ ஒன்று வேகமாக வந்துகொண்டிருந்தது. அப்போது ஒரு நாய் சாலையை கடக்க முயன்றது. இதனால் நாய் மீது மோதாமல் இருக்க ஆட்டோ டிரைவர் ஆட்டோவை வேறு பக்கமாக திருப்பினார். அப்போது சாலை ஓரத்தில் இருந்த கடை முன்பு நின்று பேசி கொண்டிருந்த இருவர் மீது ஆட்டோ மோதியது. இதில் டிரைவர் மீது ஆட்டோ கவிழ்ந்தது. பின்னர் ஆட்டோ மோதி அடிபட்ட நபர் அந்த ஆட்டோவை தூக்கி டிரைவர் வெளியே வர உதவினார். இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி