இளையராஜா காப்புரிமை விவகாரம்.. விஜய் ஆண்டனி பதில்

54பார்த்தது
இளையராஜா காப்புரிமை விவகாரம்.. விஜய் ஆண்டனி பதில்
"மஞ்சுமெல் பாய்ஸ்" படத்தில் இடம்பெற்றிருக்கும் கண்மணி அன்போடு காதலன் என்ற பாடலை தனது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக இசையமைப்பாளர் இளையராஜா அந்த படக்குழுவினருக்கு நோட்டீஸ் அனுப்பியிருந்தார். இந்நிலையில் இதுகுறித்து நடிகர் மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்த அவர், “இளையராஜாவின் இசைக்கான காப்புரிமை அவரிடம் இருந்தால் அவர் கேட்பதில் தவறில்லை. இல்லையெனில், அது தயாரிப்பாளருக்கே சொந்தம். ‘மஞ்சுமெல் பாய்ஸ்’ படக்குழுவினர் மரியாதை நிமித்தமாக ‘கண்மணி’ பாடலுக்கு இளையராஜாவிடம் அனுமதி கேட்டிருக்கலாம்” என்றார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி