கால்வாயில் கவிழ்ந்த கார் - 6 பேர் பலி

20088பார்த்தது
மகாராஷ்டிர மாநிலம் சாங்லியில் நேற்று (மே 28) நள்ளிரவு 12.30 மணியளவில் தாஸ்கான்-மனராஜுரி சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது. சிஞ்சனி கிராமம் அருகே கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தண்ணீர் இல்லாத கால்வாயில் விழுந்தது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்தனர். பலத்த காயமடைந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.