இயக்குநரும், நடிகருமான சசிகுமார் தனது 50வது பிறந்தநாளை இன்று (செப்.28) கொண்டாடுகிறார். அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக 'நந்தன்' பட இயக்குநர் இரா.சரவணன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், நந்தன் படப்பிடிப்பில் சசிகுமார் பட்ட கஷ்டங்கள் குறித்து பகிர்ந்துள்ளார். மேலும், அதற்காக தன்னை மன்னித்துவிடுங்கள் என்றும் இயக்குநர் இரா.சரவணன் கூறியுள்ளார். இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.