காலமெல்லாம் நிலைத்திருக்கும் கருப்பு சிவப்பின் எதிர்காலம் என்ற முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் எக்ஸ் பதிவு வைரலாகி வருகிறது. அதில், என்னை தோளோடு தோளாக அணைத்துக் கொண்ட இளஞ்சூரியனுக்கு வாழ்நாளுக்கும் கடமைப்பட்டிருக்கிறேன் என கூறியிருந்தார். அதில் கமெண்ட் தெரிவித்துள்ள தொண்டர் ஒருவர், துணை முதல்வராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்க வேண்டும். தொண்டர்களை அரவணைத்து இன்முகத்தோடு பழக உங்களால் மட்டுமே முடியும் என கூறியுள்ளார்.