புதுக்கோட்டை மாவட்டத்தில் கருவில் இருந்த பெண் குழந்தையை அழிக்க முயன்ற பெண் நேற்று உயிரிழந்தார். இந்த சம்பவத்திற்கு அம்மாவட்ட ஆட்சியர் அருணா வேதனை தெரிவித்துள்ளார். மேலும் அவர் கூறியதாவது, “புதுக்கோட்டையில் குழந்தைகளை கருவிலேயே அழிக்கும் செயல் அதிகமாக உள்ளது. இதுபோன்ற சட்டவிரோத செயல்களை யாரும் செய்ய வேண்டாம் என தயவுகூர்ந்து கேட்கிறேன். பெண்ணாக இருந்தாலும், ஆணாக இருந்தாலும் கல்வியை கொடுத்தால் அவர்கள் கட்டாயம் உயர்வார்கள்” என்றார்.