எமனாக வந்த மாடு.. நொடியில் பிரிந்த மூன்று உயிர்..

571பார்த்தது
ராஜஸ்தான் மாநிலம் தௌசாவில் உள்ள ராஜஸ்தான்-மும்பை நெடுஞ்சாலையில் இன்று(மே 12) கோர விபத்து நடந்துள்ளது. நெடுஞ்சாலையில் வேகமாக சென்ற காரின் முன்னே திடீரென மாடு வந்தது. இதனால், வந்த வேகத்தில் அந்த கார் சாலை ஓரமாக திருப்பப்பட்டு நின்றது. அப்போது எதிர்பாராத விதமாக பின்னால் வந்த லாரி காரின் மீது மோதியது. இந்த விபத்தில் காரில் இருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி