முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று (மே 12) தனது 70ஆவது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு பல்வேறு கட்சித் தலைவர்கள், அதிமுக தொண்டர்களும் வாழ்த்து கூறி வருகின்றனர். அந்த வகையில், தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், ‘X’ தளத்தில் தனது வாழ்த்தை தெரிவித்துள்ளார். அதில், “அஇஅதிமுக பொதுச் செயலாளரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்” என குறிப்பிட்டுள்ளார்.