தமிழகத்தில் கனமழை கொட்டும் - எந்தெந்த மாவட்டங்கள்?

15415பார்த்தது
தமிழகத்தில் கனமழை கொட்டும் - எந்தெந்த மாவட்டங்கள்?
தமிழ்நாட்டில் இன்று(மே 12) பிற்பகல் 1 மணிக்குள் 7 மாவட்டங்களில் கனமழை கொட்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு, மயிலாடுதுறை, நாகை, கடலூர், தஞ்சை, திருவாரூர், அரியலூரில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. இன்று முதல் வரும் 16ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. மேலும், மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுத்துள்ளது. அதன்படி, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், விருதுநகர், தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.