மகாபாரதத்தில் சக்கர வியூகத்தில் அபிமன்யூ மாட்டிக் கொண்டதைப் போல, மோடி ஆட்சியில் நாடு மாட்டிக் கொண்டுள்ளது என எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளார். மக்களவையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் உரையாற்றி வரும் ராகுல் காந்தி, "சக்கர வியூகத்தால் மாநிலங்கள் மூலம் மாநிலங்கள் ஒடுக்கப்படுகின்றன. மோடி அரசு என்பது வேலைவாய்ப்பின்மை மற்றும் வினாத்தாள் கசிவின் அர்த்தமாக மாறிவிட்டது" என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டை கூறியுள்ளார்.