உலகின் மிக உயரமான பாலம் கட்டி முடிப்பு.! விரைவில் திறப்பு

50பார்த்தது
உலகின் மிக உயரமான பாலம் கட்டி முடிப்பு.! விரைவில் திறப்பு
உலகின் மிக உயரமான செனாப் ரயில் பாலத்தின் கட்டுமானப் பணிகள் கிட்டத்தட்ட நிறைவடைந்துள்ளன. ஜம்மு பகுதியில் உள்ள செனாப் ஆற்றின் மீது கட்டப்பட்டுள்ள இந்த ரயில் பாலம் வழியாக ரம்பன் - ரியாசிக்கு விரைவில் ரயில் சேவை தொடங்கப்படும் என்று வடக்கு ரயில்வே அறிவித்துள்ளது. காஷ்மீரை இந்தியாவின் மற்ற பகுதிகளுடன் இணைக்கும் வகையில் உதம்பூர் - ஸ்ரீநகர் - பாரமுல்லா ரயில் திட்டத்தின் ஒரு பகுதியாக செனாப் பாலம் கட்டப்பட்டது. செனாப் ஆற்றங்கரையில் இருந்து 359 மீட்டர் உயரத்தில் 1,315 மீட்டர் நீளம் கொண்டதாக இந்த ரயில் பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி