டேவிட் வெயிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு

70பார்த்தது
டேவிட் வெயிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு
நமீபிய மூத்த கிரிக்கெட் வீரர் டேவிட் வெயிஸ் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். டி20 உலகக் கோப்பையில் இங்கிலாந்திடம் நமீபியா தோல்வியடைந்ததை அடுத்து அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. “தற்போது தனக்கு 39 வயதாகிறது. தனது தொழில் வாழ்க்கைக்கு விடைபெற இதுவே சரியான தருணம்” என அவர் கூறியுள்ளார். இதற்கு முன்பு 2013 டி20 உலகக் கோப்பை மற்றும் 2015 ஒருநாள் உலகக் கோப்பையில் தென் ஆப்பிரிக்காவுக்காக விளையாடினார். 2021ஆம் ஆண்டு முதல் நமீபிய அணிக்காக விளையாடி வந்தார்.

தொடர்புடைய செய்தி