காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்களை திறந்து வைத்த முதல்வர்!

77பார்த்தது
காவலர் குடியிருப்புகள், காவல் நிலையங்களை திறந்து வைத்த முதல்வர்!
காவல்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள 62 காவலர் குடியிருப்புகள், 2 காவல் நிலையங்கள், திருநெல்வேலி மாநகர் மற்றும் திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படைகளுக்கு 2 ஒருங்கிணைந்த நிர்வாகக் கட்டடங்கள் ஆகியவற்றை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காணொலி காட்சி வாயிலாக திறந்து வைத்தார். சென்னை தலைமை செயலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தலைமை செயலாளர் சிவதாஸ் மீனா, டிஜிபி சங்கர் ஜிவால், உள்துறை செயலாளர் அமுதா, தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் ஏ.கே.விஸ்வநாதன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி