எழுத்தாளர் பாமாவிற்கு ஒளவையார் விருதை வழங்கிய முதல்வர்

82பார்த்தது
எழுத்தாளர் பாமாவிற்கு ஒளவையார் விருதை வழங்கிய முதல்வர்
இலக்கிய துறையில் சிறப்பாக தொண்டாற்றி வரும் ஃபாஸ்டினா சூசைராஜுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஒளவையார் விருது வழங்கினார். பெண்களின் வாழ்க்கையை, குறிப்பாக ஒடுக்கப்பட்ட பெண்களின் வாழ்க்கையை தனது வாழ்வனுபவங்களின் மூலம், சாதி மற்றும் பாலினம் சார்ந்து சமூகத்தில் நிலவும் சமத்துவமின்மையையும் அநீதிகளையும் எடுத்துக்காட்டும் பல்வேறு நூல்களை ஃபாஸ்டினா சூசைராஜ் (எ) பாமா எழுதியுள்ளார். இந்நிகழ்ச்சியில், அமைச்சர்கள் உதயநிதி ஸ்டாலின், கீதா ஜீவன், தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி ஆகியோர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி