நிகழாண்டுக்கான சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் இன்று (ஜன. 06) காலை 9.30 மணியளவில் கூடியது. கூட்டத்தொடரில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றாமல் சபையில் இருந்து வெளியேறினார். இதனையடுத்து ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார். அதில், சாதிவாரி கணக்கெடுப்பை மத்திய அரசு காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும் என ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது, இதை மத்திய அரசு உடனே செயல்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.