கரூர் மாவட்டம் குளித்தலையை சேர்ந்த தவெக நிர்வாகிகள் விஜய் முதலமைச்சராக வேண்டி சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு யாத்திரை சென்றுள்ளனர். ’2026ஆம் ஆண்டில் தமிழக முதல்வர் விஜய்’ என்ற வாசகங்கள் அடங்கிய பேனருடன் அவர்கள் சபரிமலைக்கு சென்றனர். அங்கு இறைவன் ஐயப்பனை தரிசித்து விஜய் வெற்றிக்காக பிரார்த்தனை செய்தார்கள். தவெக நிர்வாகிகள் பேனருடன் சபரிமலை சென்ற வீடியோ காட்சி வைரலாகியுள்ளது.