திண்டுக்கல்: தனியார் மதுபான கூடத்தில் அத்துமீறி நுழைந்து பிரச்சனை செய்ததாக பாஜக திண்டுக்கல் மேற்கு மாவட்ட தலைவர் கனகராஜ் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கனகராஜ், மாவட்ட பொதுச் செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யபட்டது. பின்னர், அவர்களை போலீசார் கைது செய்தனர். இந்த நிலையில், இருவரையும் ஜாமீனில் விடுவித்து பழனி குற்றவியல் நடுவர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.