சீனாவில், 'ஹியூமன் மெடாநிமோ’ (HMPV) என்ற புதிய வகை வைரஸ் பரவி வருகிறது. இந்த நிலையில் இந்த புதிய வகை வைரஸ் பாதிப்பு இந்தியாவிலும் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, HMPV வைரஸ் பாதிப்பு பெங்களூருவை சேர்ந்த 8 மாத குழந்தைக்கு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதை கர்நாடக சுகாதாரத்துறை உறுதி செய்துள்ள நிலையில் மத்திய அரசுக்கும் இது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.