இந்த ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. ஆளுநர் ஆர்.என்.ரவி கூட்டத்தொடர் தொடங்கிய 3 நிமிடங்களிலேயே உரையை வாசிக்காமல் சட்டப்பேரவையில் இருந்து புறப்பட்டார். இதையடுத்து சபாநாயகர் அப்பாவு உரையை வாசிக்கிறார். வழக்கமாக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நிகழ்வுகளை நேரலை செய்ய ஊடகங்களுக்கு காட்சி இணைப்பு வழங்கப்படும். ஆனால் இன்று அரசின் சார்பில் காட்சி இணைப்பு வழங்கப்படவில்லை.