தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.6) காலை 9.30 மணிக்கு தொடங்கியது. இதில், "யார் அந்த சார்?" என்று அச்சிடப்பட்ட பேட்ஜுடன் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உள்பட அனைவரும் சட்டமன்றத்திற்கு வருகை தந்தனர். கூட்டத்தொடர் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதிமுக உறுப்பினர்கள் அனைவரும் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர். தொடர்ந்து, பேரவை வாசலில் "யார் அந்த சார்?" என்ற பதாகைகளை ஏந்தியவாறு அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.