திண்டுக்கல் மாவட்டம
் நல்லமநாயக்கன் பட்டியில் புனித வனத்து அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழாவை முன்னிட்டு
இன்று மாபெரும் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் பங்கேற்க மதுரை அலங்காநல்லூர்
பகுதியைச் சேர்ந்த விவசாயி ராஜேந்திரன் என்பவற்றின் காலை கொண்டுவரப்பட்டது. வாடிவாசலில் அவிழ்த்துவிடப்பட்ட காலை போட்டியில் வெற்றிபெற்று வெளியே ஓடியது. இதையடுத்து திண்டுக்கல் தோட்டனூத்து அருகே காளை பிடிக்கப்பட்ட நிலையில், காளைக்கு மூக்னாங்கயிறு கோர்த்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக காலை மயங்கி விழுது உயிரிழந்தது. இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.