நாடு முழுவதும் நாளை (மார்ச் 20) காலை நடைபெறவிருந்த ரயில்வே வாரியத் தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் உதவி ஒட்டுநர் பதவிக்கான தேர்வு இன்று (மார்ச் 19) ரத்தான நிலையில் நாளைய தேர்வும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இன்றைய தினம் நடைபெற இருந்த ரயில்வே தேர்வை எழுத, தமிழக மாணவர்கள் தெலங்கானா சென்றனர். ஆனால், தேர்வு ரத்தான நிலையில் செய்வதறியாமல் சோகத்துடன் தமிழகம் திரும்பி வருகின்றனர்.