வக்ஃப் வாரிய மசோதாவை எதிர்ப்பது ஏன் என்பது குறித்து விடுதலை சிறுத்தைகள் எம்.எல்.ஏ ஆளூர் ஷாநவாஸ் விளக்கமளித்தார். "எல்லாருக்கும் இருப்பது போலதான் இஸ்லாமியர்களுக்கும் தனிச்சட்டம் இருக்கிறது. அதை பறிப்பதன் மூலம் இஸ்லாமியர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை, வன்மத்தை பாஜக வெளிப்படுத்துகிறது. இஸ்லாமியர்களின் நலனுக்காக இதை செய்கிறோம் என பாஜக சொல்வது வேடிக்கையாக உள்ளது” என்றார்.