வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி - விஜய்

77648பார்த்தது
வாழ்த்து கூறிய அனைவருக்கும் நன்றி - விஜய்
அரசியல் பயணத்திற்கு வாழ்த்து தெரிவித்த அனைவருக்கும் நன்றி என நடிகரும், தமிழக வெற்றி கழகத்தின் தலைவருமான விஜய் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு நான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்திற்கு தங்களது வாழ்த்துகளை தெரிவித்த பெருமதிப்புக்குரிய பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், அன்புக்குரிய திரைத்துறை நண்பர்கள், பாசத்துக்குரிய தமிழக தாய்மார்கள், சகோதர, சகோதரிகள், ஊக்கமளிக்கும் ஊடகவியலாளர்கள், "என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்" அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளுடன் பணிவான வணக்கங்கள் என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி