பால்வளத்துறை அமைச்சராக இருந்த மனோ தங்கராஜ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது, “பாசிச அரசியலை எதிர்த்து, ஜனநாயக அமைப்புகளை பலப்படுத்தி, சமூக நீதியை நிலைநாட்ட தமிழ்நாட்டில் எடுக்கப்படும் முன்னெடுப்புகளில் எனது பங்களிப்பு தொடர்ந்து இருக்கும். பால்வளத்துறை அமைச்சராக பொதுமக்களுக்கு எந்த தட்டுப்பாடுமின்றி பால் விநியோகம் செய்யும் நிலையை உருவாக்கியது மன நிறைவை தருகிறது. இப்பணிக்கு ஒத்துழைப்பு அளித்த அனைவருக்கும் நன்றி” என கூறியுள்ளார்.