தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மற்றும் அமைச்சர் பொன்முடிக்கு எதிரான மேம்பால முறைகேடு வழக்கு திரும்பப் பெறப்பட்டதை அடுத்து மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. 1996-2001 ஆட்சிக் காலத்தில் சென்னையில் மேம்பாலங்கள் கட்டியதில் ரூ.115 கோடி முறைகேடு என வழக்கு தொடரப்பட்டிருந்தது. 2006-ல் ஆட்சி மாற்றத்திற்குப் பின் வழக்கு திரும்பப்பெறப்பட்டது. இதனை எதிர்த்து, மனுத்தாக்கல் செய்த கோவையைச் சேர்ந்த தொழிலதிபர் அதனை திரும்பப் பெற்ற நிலையில் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.