முன்ஜாமின் கோரிய நடிகை கஸ்தூரி மனு மீது மெட்ராஸ் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் விசாரணை நடந்தது. அப்போது கஸ்தூரி பேசிய காட்சிகளும் நீதிமன்றத்தில் ஒளிபரப்பப்பட்டது. மேலும், கஸ்தூரிக்கு முன்ஜாமின் வழங்க அரசு தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், "தெலுங்கு மக்கள் வந்தவர்கள் அல்ல. தமிழகத்தை சேர்ந்தவர்கள், தமிழகத்தின் பகுதியானவர்கள்” என உயர்நீதிமன்ற மதுரை கிளை கருத்து தெரிவித்துள்ளது.