வரவு செலவு தகராறு காரணமாக விவசாயியை தாக்கி மோட்டார் சைக்கிளை பறித்து சென்றவரை போலீஸார் கைது செய்து மற்றொருவரை தேடி வருகின்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே உள்ள திருலோகி நடுத்தெருவைச் சேர்ந்தவர் முத்தையன் மகன் சேகர் (64) விவசாயி. இவர் கடந்த செப். 20 இல் ஆடுதுறை கஞ்சன்மேடு தெருவில் வரும்போது 2 பேர் லழிமறித்து தாக்கி மோட்டார் சைக்கிள், ரொக்க பணம் 47 ஆயிரம் உள்ளிட்டவைகளை பறித்து சென்று ஓடிவிட்டார்களாம். இதுபற்றி சேகர் திருவிடைமருதூர் காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
புகாரின் பேரில் உதவி ஆய்வாளர் குழந்தைவேல் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தியதில் சேகரை தாக்கியவர்கள் ஆடுதுறை காஞ்சான்மேடு தெருவைச்சேர்ந்த குமார் மகன் எலி என்ற மூவேந்தன், அம்மசத்திரம் பிரதான சாலையில் வசிக்கும் கனகராஜ் மகன் கார்த்தி (38) என்றும் தெரியவந்தது. வரவு செலவு காரணமாக தகராறு ஏற்பட்டு சேகரை தாக்கி அவரிடமிருந்து மோட்டார் சைக்கிள், ரூ 47 ஆயிரம் உள்ளிட்டவைகளை பறித்து சென்றது தெரிய வந்தது. இதில் கார்த்தியை வெள்ளிக்கிழமை கைது செய்து மற்றொருவரான எலி என்ற மூவேந்தனை தேடி வருகிறார்.