புரோ கபடி லீக் தொடரின் 3ஆவது கட்ட ஆட்டங்கள் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் நேற்று (டிச.5) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி - உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியது முதல் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில் இரண்டு அணிகளும் 32 - 32 என்ற புள்ளிகள் எடுத்தன. இதன் காரணமாக இந்த ஆட்டம் டிராவில் முடிந்தது. தொடர்ந்து, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் - யு மும்பா அணிகளுக்கு இடையே நடைபெற்ற ஆட்டமும் 22-22 என்ற புள்ளிகளுடன் டிரா ஆனது.