விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் முகில் வண்ணம் பிள்ளை தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியம். இவரது மனைவி நாகலட்சுமி (48). இவர் சமையல் செய்வதற்காக அடுப்பில் மண் எண்ணெய் ஊற்றும் போது வெளியே சிந்தியதாக தெரிகிறது. இதனை கவனிக்காத அந்த பெண், அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக சேலையில் தீப்பற்றி உடல் முழுவதும் பரவியது. மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அப்பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.