துபாயில் நடைபெற்று வரும் 24 ஹவர்ஸ் கார் ரேஸில் நடிகர் அஜித் பங்கேற்றுள்ளார். அவரைக் காண அங்கு அஜித் ரசிகர்கள், ஏராளமானோர் கூடியுள்ளனர். அப்போது, ரசிகர்கள் அஜித் விசில் அடித்து அஜித்தை உற்சாகப்படுத்தினர். இதனைப் பார்த்த அஜித், ரசிகர்களுக்கு Flying Kiss கொடுத்து நன்றி தெரிவித்தார். இதுகுறித்த வீடியோ வைரலாகி வருகிறது. நேற்று (ஜன.10) நடந்த ரேஸில் அஜித்குமார் 7ஆவது இடம் பிடித்து, அடுத்து சுற்றுக்குத் தேர்வானார். இதனை, அஜித் ரசிகர்கள் மேளம் தாளம் முழக்கத்துடன் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.