சென்னை பட்டாபிராமில் கிரேசி (42) தனது மகள் எப்சிபா (17) என்பவருடன் வசித்து வந்தார். கிரேசியின் கணவர் டேவிட் குடும்ப பிரச்னை காரணமாக தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஜன. 09) நள்ளிரவு அண்ணன் மற்றும் தாய் தங்களை சரியாக கவனித்துக் கொள்ளவில்லை என கடிதம் எழுதி வைத்து விட்டு, கிரேசி மகளுடன் சேர்ந்து தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.