மின்வாரிய கும்பகோணம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம் நாளை மார்ச் 13ஆம் தேதி காலை 11 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை நடைபெற உள்ளது. மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் (பொறுப்பு) விமலா தலைமையில் நடைபெறும் கூட்டத்தில் கும்பகோணம், பாபநாசம், அய்யம்பேட்டை, கபிஸ்தலம், திருக்கருக்காவூர், கணபதி, அக்ரஹாரம், பட்டீஸ்வரம், சுவாமிமலை, திருப்புறம்பியம் ஆகிய மின்வாரிய அலுவலகப் பகுதியைச் சேர்ந்த மின் நுகர்வோர் பங்கேற்று குறைகள் இருந்தால் நேரில் தெரிவித்து தீர்வு காணலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.