பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் வருகிற 14-ஆம் தேதி திறக்கப்படுகிறது. 19-ம் தேதி வரை பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு பின்னர் நடை அடைக்கப்படுகிறது. இந்த நிலையில் பக்தர்கள் 18-ம் படி ஏறி கொடி மரத்திலிருந்து நேராக கோவிலுக்குள் நுழைந்து சுவாமி தரிசனம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதனால் மேம்பாலத்தைச் சுற்றி வந்து தரிசனம் செய்வதற்கான நேரம் மிச்சமாகும். மேலும் பக்தர்கள் கூடுதல் நேரம் ஐயப்பனை தரிசிக்கும் வாய்ப்பும் கிடைக்கும்.